ஒற்றை முறை வங்கி கணக்கு குறித்த பயிற்சி முகாம்
திருவாரூரில் பள்ளி கல்வித்துறை சார்பில்ஒற்றை முறை வங்கி கணக்கு குறித்த பயிற்சி முகாம் நடந்தது.
திருவாரூரில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில் மண்டல அளவிலான ஒற்றை முறை வங்கி கணக்கு பயிற்சி முகாம் நடந்தது. முகாமிற்கு முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன் தலைமை தாங்கினார். மாநில நிதி கட்டுப்பாட்டு அலுவலர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில் கருத்தாளராக திருவண்ணாமலை மாவட்ட கணக்கு மற்றும் தணிக்கை மேலாளர் சக்திவேல், மாநில கணக்காளர்கள் கீர்த்திவாசன், அஸ்வின், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் பாலசுப்பிரமணியன், மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேல் கலந்து கொண்டனர்.
இதில் திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் பணிபுரியும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர், மாவட்ட திட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட கணக்கு மற்றும் தணிக்கை மேலாளர், வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார மேற்பார்வையாளர்கள் பள்ளி மேலாண்மை குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் வட்டார பள்ளி மேலாண்மை குழு கணக்காளர்கள் கலந்து கொண்டனர்.