தூக்குப்போட்டு பயிற்சி பெண் டாக்டா் தற்கொலை
திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி விடுதியில் தூக்குப்போட்டு பயிற்சி பெண் டாக்டா் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்வதற்கு முன்பு அவர் எழுதி வைத்து இருந்த ஒரு கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி விடுதியில் தூக்குப்போட்டு பயிற்சி பெண் டாக்டா் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்வதற்கு முன்பு அவர் எழுதி வைத்து இருந்த ஒரு கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பயிற்சி பெண் டாக்டர்
நாமக்கல் மாவட்டம் மோகனூரை சேர்ந்தவர் வேலுசாமி. இவர், லாரி டிரைவராக வேலை செய்து வருகிறாா். இவருடைய மகள் காயத்ரி (வயது 22). இவர், கடந்த 2017-ம் ஆண்டு நீட் தேர்வில் வெற்றி பெற்று கடந்த 4 ஆண்டுகளாக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் படித்து விட்டு தற்போது திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டராக பணியாற்றி வந்தார்.பயிற்சி டாக்டர்களுக்கான விடுதியில் தங்கி இருந்த காயத்ரி, கடந்த 2 நாட்களாக பணிக்கு செல்லவில்லை.
தூக்குப்போட்டு தற்கொலை
இதனால் அவரது தோழி, காயத்ரிக்கு போன் செய்தார். ஆனால் காயத்ரி போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த காயத்ரியின் தோழி நேற்று முன்தினம் இரவு காயத்ரி தங்கி இருந்த அறைக்கு சென்று கதவை தட்டினார். நீண்ட நேரம் தட்டியும் அறைக்கதவு திறக்கப்படவில்லை.இதனால் கல்லூரி பாதுகாவலர் மற்றும் இதர பயிற்சி டாக்டர்கள் சேர்ந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனா். அப்போது அறைக்குள் மின்விசிறியில் நைலான் கயிற்றில் காயத்ரி தூக்கில் தொங்கிக்கொண்டு இருப்பது தெரிய வந்தது.இதைத்தொடர்ந்து அவரை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு காயத்ரியை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
கடிதம் சிக்கியது
இது குறித்து தகவல் அறிந்த திருவாரூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் காயத்ரி தங்கி இருந்த அறையில் இருந்து அவர் எழுதி வைத்து இருந்த ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் காயத்ரி என்ன எழுதி இருந்தார் என தெரியவில்லை.காயத்ரி கடந்த 6 மாதங்களாக மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.காயத்ரி தற்கொலை குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு சிவராமன் தலைமையிலான போலீசார், விடுதியில் தங்கியிருந்த சக பயிற்சி டாக்டர்கள் மற்றும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் ஆகியோரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம்
இந்த நிலையில் மகள் இறந்த தகவல் அறிந்து நாமக்கல்லில் இருந்து திருவாரூருக்கு வந்த காயத்ரியின் பெற்றோர், திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த தங்கள் மகள் உடலை பார்த்து கதறி அழுத காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்தது.விடுதி அறையில் பயிற்சி பெண் டாக்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மருத்துவ மாணவர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்படும் என போலீசார் தெரிவித்தனர்.