அண்ணாமலைப்பல்கலைக்கழக வேளாண்துறை மாணவர்களுக்கு பயிற்சி
அண்ணாமலைப்பல்கலைக்கழக வேளாண்துறை மாணவர்களுக்கு பயிற்சி
கொள்ளிடம் அருகே ஆனைக்காரன் சத்திரம் ஊராட்சி அனுமந்தபுரம் கிராமத்தில் அண்ணாமலைப்பல்கலைக்கழக வேளாண்துறை இறுதியாண்டு மாணவ, மாணவிகளுக்கு சம்பா சாகுபடி நெல் ரகங்கள் குறித்தும், சாகுபடி செய்யும் தொழில்நுட்பம் குறித்தும் பயிற்சி நடைபெற்றது. பயிற்சிக்கு ஆனைக்காரன் சத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ் தலைமை தாங்கினார். கொள்ளிடம் வேளாண்மை உதவி இயக்குனர் எழில்ராஜா, விரிவாக்கத்துறை பேராசிரியர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வேளாண்மை விரிவாக்கதுறை பேராசிரியர் சண்முகராஜா கலந்துகொண்டு பேசுகையில், விவசாயிகள் அரசின் நலத்திட்டங்களை தெரிந்து கொள்ளும் வகையில் உழவன் செயலி என்ற இணையதளத்தை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என கூறினார். இதில் முன்னோடி விவசாயிகள் மற்றும் வேளாண்மை துறை பேராசிரியர்கள், ஊராட்சி உறுப்பினர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் கலந்து கொண்டனர்.