ஆழ்வார்திருநகரி யூனியன் அலுவலகத்தில் குடிநீர், சுகாதார மேலாண்மை உறுப்பினர்களுக்கு பயிற்சி
ஆழ்வார்திருநகரி யூனியன் அலுவலகத்தில் குடிநீர், சுகாதார மேலாண்மை உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
தென்திருப்பேரை:
தென்திருப்பேரையில் உள்ள ஆழ்வார்திருநகரி யூனியன் அலுவலகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தகவல் தொடர்பு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு, ஜல்ஜீவன் மிஷன் சார்பில் கிராம குடிநீர் மற்றும் சுதாதார் மேலாண்மை உறுப்பினர்களுக்கு பயிற்சிமுகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நிர்வாகப் பொறியாளர் ராஜா தலைமை தாங்கினார். உதவி நிர்வாக பொரியாளர் ஜான் செல்வன் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகராஜ், பாக்கியம் லீலா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்ரீதேவி, கிறிஸ்டோபர் தாசன் ஆகியோர் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். ஆழ்வார்திருநகரி யூனியனுக்கு உட்பட்ட 30 ஊராட்சிகளில் உள்ள சுகாதார மேலாண்மை குழு உறுப்பினர்கள் 150 பேர் கலந்து கொண்டனர். தண்ணீர் பாதுகாப்பு, தண்ணீர் தரம், தண்ணீர் சேமிப்பு, சுத்தமான குடிநீர் மற்றும் வேதியியல் பாக்டீரியாக்கள் சம்பந்தப்பட்ட ரசாயனங்களை எவ்வாறு கண்டறிவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. வெங்கடேசன், தனசேகர், விமலா, பூர்ணிமா, சுகுமார், சங்கரநயினார், பாலசுப்பிரமணியன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.