விவசாயிகளுக்கு பயிற்சி


விவசாயிகளுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 3 Sept 2023 3:15 AM IST (Updated: 3 Sept 2023 3:16 AM IST)
t-max-icont-min-icon

சர்வதேச தென்னை தினத்தையொட்டி விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது.

திண்டுக்கல்

திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழக வேளாண் கல்லூரி மாணவிகள், பழனி பகுதியில் தங்கியிருந்து 'கிராம தங்கல்' திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். அதன்படி நேற்று சர்வதேச தென்னை தினத்தையொட்டி காவலப்பட்டியில் தென்னை விவசாயம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். அப்போது தென்னையில் பூச்சி, வண்டு, நோய் தாக்குதல், கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விளக்கம் அளித்தனர். இதில் காவலப்பட்டியை சேர்ந்த விவசாயிகள் பலர் கலந்துகொண்டு பயன் அடைந்தனர்.


Related Tags :
Next Story