விவசாயிகளுக்கு பயிற்சி
பன்னீர்குளத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே உள்ள பன்னீர்குளம் கிராமத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் கொய்யா மரங்களில் விளைச்சலை பெருக்க கவாத்து செய்வது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடந்தது. தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் மலர் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் சுந்தரராஜன் கொய்யா மரங்களில் விளைச்சலை பெருக்க கவாத்து செய்வது குறித்து செயல் விளக்கம் அளித்து பேசினார்.
வாகைகுளம் ஸ்காட் வேளாண்மை அறிவியல் மையம் வேல்முருகன் கொய்யா சாகுபடி மேலாண்மை குறித்து பேசினார். தோட்டக்கலை உதவி இயக்குனர் சண்முகம் விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தார். இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை அலுவலர் இளங்கோ, உதவி அலுவலர்கள் சரவணகுமார், கருப்பசாமி, செண்பககுமார், வனிதா மாரி ஆகியோர் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story