விவசாயிகளுக்கு கரும்பு சாகுபடி பயிற்சி
தியாகதுருகம் அருகே விவசாயிகளுக்கு கரும்பு சாகுபடி குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி
கண்டாச்சிமங்கலம்,
தியாகதுருகம் அருகே எறஞ்சி கிராமத்தில் வட்டார வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் நீடித்த நிலையான கரும்பு சாகுபடி குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வேளாண்மை உதவி இயக்குனர் சந்துரு தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் வேலாயுதம் முன்னிலை வகித்தார். முகாமில் அதிக மகசூல் மற்றும் சர்க்கரை சத்துள்ள கரும்பு ரகங்கள், நீரில் கரையும் உரங்களை பாசன நீரின் மூலம் அளித்தல், நோய் தாக்குதலை கட்டுப்படுத்துதல் குறித்து விவசாயிகளுக்கு விளக்கி கூறி செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து 40 விவசாயிகளுக்கு அசோஸ்பைரில்லம் திரவ உயிர் உரம் வழங்கப்பட்டது. இதில் உதவி வேளாண்மை அலுவலர் செல்வராஜ், அட்மா திட்ட பணியாளர்கள் ரவி, சிவப்பிரகாசம் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story