பேரிடர் காலங்களில் முதல் தகவல் அளிப்பவர்களுக்கான பயிற்சி


பேரிடர் காலங்களில் முதல் தகவல் அளிப்பவர்களுக்கான பயிற்சி
x

பேரிடர் காலங்களில் முதல் தகவல் அளிப்பவர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது.

ராணிப்பேட்டை

அரக்கோணம் மற்றும் நெமிலி தாலுகாவில் பேரிடர் காலங்களில் முதல் தகவல் அளிப்பவர்களுக்கான பயிற்சி அரக்கோணம் டவுன் ஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை சப் - இன்ஸ்பெக்டர் அண்ணாமலைசாமி தலைமையிலான வீரர்கள் பேரிடர் காலங்களில் மழை, மின்னல், காற்று உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகளில் சிக்குபவர்களை மீட்டெடுத்து, உரிய பாதுகாப்புடன் முதல் உதவி சிகிச்சை அளிப்பது குறித்து செயல் முறையில் செய்து காண்பித்தனர்.

நிகழ்ச்சியில் அரக்கோணம் தாசில்தார் பழனிராஜன் பேசிய போது பேரிடர் காலத்தில் ஏற்படும் பாதிப்பு குறித்து வருவாய், சுகாதாரம், காவல், கால்நடை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்கவேண்டும். பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக அரசின் உதவித்தொகை வழங்கப்படும். மேலும் உணவு மற்றும் உடை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த நிகழ்ச்சியில் தணிகை போளூர் கிராம நிர்வாக அலுவலர் தணிகாசலம் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள், தீயணைப்பு வீரர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story