இயற்கை வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி


இயற்கை வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
x

சின்னமனூர் அருகே காமாட்சிபுரத்தில் இயற்கை வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

தேனி

சின்னமனூர் அருகே காமாட்சிபுரத்தில் உள்ள சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் சார்பில் விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை குறித்த பயிற்சி அறிவியல் மைய வளாகத்தில் நடந்தது.

வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் பச்சைமால் தலைமை தாங்கி பேசினார். நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தின் உதவி பேராசிரியை ஜான்சிராணி, பண்ணை கழிவுகளை மறுசுழற்சி செய்து ரசாயன உரங்களின் தேவையை குறைக்கும் வழிமுறைகள் குறித்து பேசினார். தொழில்நுட்ப வல்லுனர்கள் மகேஸ்வரன், இயற்கை இடுபொருட்களை பயன்படுத்தி பயிர்களின் விளைச்சலை அதிகரிக்கும் நுட்பங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.

இதில் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர். பின்னர் விவசாயிகளுக்கு இயற்கை இடுபொருட்களான பஞ்சகாவ்யா, மண்புழு உரம் ஆகியவை வழங்கப்பட்டது. முடிவில் தொழில்நுட்ப வல்லுனர் சபரிநாதன் நன்றி கூறினார்.


Next Story