மஸ்தூர் பணியாளர்களுக்கு பயிற்சி
மஸ்தூர் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
திருநெல்வேலி
நெல்லை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த பணி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நெல்லை மாநகரில் இந்த பணியில் கொசு ஒழிப்பு வேலையில் ஈடுபட்டு வரும் மஸ்தூர் களப்பணியாளர்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளனர்.
அவர்களுக்கான பயிற்சி முகாம் நெல்லை தாலுகா அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. தாசில்தார் மாணிக்கவாசகம், துணை தாசில்தார் உமா மகேசுவரி ஆகியோர் பயிற்சி அளித்தனர். வாக்காளர் பட்டியலில் செயலி மூலம் ஆதார் எண்ணை எப்படி இணைப்பது என்பது விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது ஊழியர்கள் தங்களது செல்போனில் இதற்கான செயலியை பதிவிறக்கம் செய்து ஆதார் எண்கள் இணைப்பு பணியை மேற்கொண்டனர்.
Related Tags :
Next Story