திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்களுக்கு பயிற்சி


திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்களுக்கு பயிற்சி
x

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்களுக்கு பயிற்சி நடந்தது.

திருப்பத்தூர்

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்களுக்கு பயிற்சி நடந்தது.

திருவலத்தை அடுத்த சேர்காடு பகுதியில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களுக்கு ஒருநாள் புத்தாக்க பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் இருந்து 52 கல்லூரிளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டு நல பணி திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பல்கலைக்கழக துணைவேந்தர் டி.ஆறுமுகம் முதன்மை உரையாற்றினார். பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார். பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் விஜயராகவன் வாழ்த்தி பேசினார்.

இதில் நாட்டு நலப்பணித் திட்ட பிராந்திய இயக்குனர் முனைவர்.சாமுவேல் செல்லையா அவர்கள் நாட்டு நலப்பணித் திட்ட நோக்கம் மற்றும் வரும் கல்வியாண்டின் செயல்திட்டம் ஆகிவற்றை பற்றி சிறப்புரையாற்றினார். மாநில நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர்.ம.செந்தில் குமார் அவர்கள் நாட்டு நலப்பணித்திட்ட நிதி மற்றும் ஆண்டின் செயல்திட்டம் மற்றும் அதன் செயலாக்கம் குறித்து எடுத்துரைத்தார். முடிவில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கண்ணதாசன் நன்றி கூறினார்.


Next Story