ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பயிற்சி
கீழ்பென்னாத்தூர் வட்டார வள மையத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பயிற்சி நடந்தது.
கீழ்பென்னாத்தூர்
கீழ்பென்னாத்தூர் வட்டார வளமைய கூட்டரங்கில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கணேசமூர்த்தி வழிகாட்டுதலின் பேரில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 45 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பள்ளி மேலாண்மை குழு மேம்பாட்டு பயிற்சி நடந்தது.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) ச.செல்வம் வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர்கள் பொ.மோகன், சு.ராமமூர்த்தி ஆகியோர் பயிற்சியை தொடங்கி வைத்து பேசினர்.
இதில் கல்வித்துறை சார்பில் ஆசிரியர் பயிற்றுனர் சுப.தமிழ்நேசன், ஊரக வளர்ச்சித் துறை சார்பில் அ.நேருஜி ஆகியோர் கருத்தாளர்களாக கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.
பயிற்சியின் போது கல்வி உரிமையை உறுதி செய்வதில் ஊராட்சி மன்ற தலைவர்களின் பொறுப்புகளும், கடமைகளும் குறித்து விளக்கி கூறினர்.
முடிவில் பள்ளி மேலாண்மை குழு வட்டார ஒருங்கிணைப்பாளர் கா.ஆறுமுகம் நன்றி கூறினார்.