ஓட்டப்பிடாரத்தில்பஞ்சாயத்து தலைவர்களுக்கு பயிற்சி
ஓட்டப்பிடாரத்தில்பஞ்சாயத்து தலைவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரத்தில் தமிழக அரசின் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையின் பள்ளி மேலாண்மை குழு சார்பில் 'நம் ஊராட்சி நம் பள்ளி நம் பெருமை' என்ற தலைப்பில் பஞ்சாயத்து தலைவர்களுக்கு பயிற்சி கூட்டம் யூனியன் அலுவலக வளாகத்தில் நடந்தது. பயிற்சியின் போது ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ் கலந்துகொண்டு பயிற்சியை தொடங்கி வைத்து பஞ்சாயத்து தலைவர்களுக்கான பயிற்சி கையேடுகளை வழங்கினார். இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இமாம், மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணவேணி, வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் வனிதா, ஊரக வளர்ச்சித் துறை பயிற்றுனர்கள் அதிசயமணி, இஸ்ரவேல் சஞ்சீவி மற்றும் பஞ்சாயத்து தலைவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story