எண்ணும், எழுத்தும் திட்ட கருத்தாளர்களுக்கு பயிற்சி


எண்ணும், எழுத்தும் திட்ட கருத்தாளர்களுக்கு பயிற்சி
x

எண்ணும், எழுத்தும் திட்ட கருத்தாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

விருதுநகர்

விருதுநகர் அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் எண்ணும், எழுத்தும் பயிற்சி அளிக்க உள்ள கருத்தாளர்களுக்கான 3 நாள் பயிற்சி தொடங்கியது. பயிற்சியினை தொடங்கி வைத்து பாலையம்பட்டி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் (பொறுப்பு) வெள்ளத்துரை பேசினார். மாவட்டத்தில் மொத்தம் 4,128 ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி அளிக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். நடப்பு கல்வியாண்டில் 1 முதல் 3-ம் வகுப்பு மாணவர்களுக்கு எண்ணும், எழுத்தும் என்ற உன்னத திட்டத்தை முதல்-அமைச்சர் அறிவித்து சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ள கருத்தாளர்களுக்கு தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் பாடத்திற்கு ஒவ்வொரு நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. இவர்கள் அக்டோபர் மாதம் 10,11, 12 ஆகிய தேதிகளில் அந்தந்த யூனியன்களில் நடைபெறும் பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள். இப்பயிற்சியில் சிவகாசி மாவட்ட கல்வி அலுவலர் இந்திராணி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் உதவி திட்ட அலுவலர் ஜோதிமணி ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். பயிற்சியில் 306 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் முதுகலை விரிவுரையாளர் வெங்கடசாமி நன்றி கூறினார்.



Next Story