பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி


பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி
x

பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் வகையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம்? வேலை வாய்ப்பை பெறுவது எப்படி? என்ற தலைப்பில் முதுகலை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கீழப்பழுவூர் மாவட்ட கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன முதல்வர் மொழியரசி, மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ராஜபிரியன், உடையார்பாளையம் கல்வி மாவட்ட ஆய்வாளர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.

பள்ளி தலைமை ஆசிரியர் ராஜகுமார், உடற்கல்வி அலுவலர் ராஜேந்திரன், முதுகலை ஆசிரியர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பயிற்சியின் கருத்தாளர்களாக முதுகலை ஆசிரியர் இளஞ்செழியன், உதவி வேளாண்மை அலுவலர் மகேந்திரவர்மன் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். இதில் ஜெயங்கொண்டம், தா.பழூர், ஆண்டிமடம் பகுதிகளில் உள்ள பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், அடுத்து என்ன படிக்கலாம்? வேலை வாய்ப்பை பெறுவது எப்படி? என்று மாணவர்களுக்கு எடுத்துக்கூறினர்.


Next Story