மென்பொருள் துறையில் பணிபுரிய விருப்பமுள்ள மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி


தினத்தந்தி 20 Jan 2023 12:15 AM IST (Updated: 20 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மென்பொருள் துறையில் பணிபுரிய விருப்பமுள்ள மாணவ-மாணவிகளுக்கு நடந்த பயிற்சி வகுப்பை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மென்பொருள் துறையில் பணிபுரிய விருப்பமுள்ள மாணவ-மாணவிகளுக்கு நடந்த பயிற்சி வகுப்பை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.

பயிற்சி வகுப்பு

மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து 12 -ம் வகுப்பு பயின்று வரும் உயர் கல்வி பயில மற்றும் மென்பொருள் துறையில் பணிபுரிய விருப்பமுள்ள மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது.

இந்த பயிற்சி வகுப்பினை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் இயக்குனருமான அமுதவள்ளி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாணவ, மாணவிகளுடன் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கலந்துரையாடினார்.

மென்பொருள் துறை

இதை தொடர்ந்து அவர் கூறியதாவது:- நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து 12-ம் வகுப்பு படித்து முடித்த மற்றும் இந்த கல்வியாண்டில் படித்துவரும் மென்பொருள் துறையில் பணிபுரிய விருப்பமுள்ள மாணவ, மாணவிகளுக்கு 12 மாத திறன் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு மற்றும் உயர் கல்வி பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த பயிற்சி பெறுபவர்களுக்கு எழுத்து தேர்வு வருகிற 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் இரு நாட்கள் மன்னம்பந்தல் ஏ.வி.சி.பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள கணினி ஆய்வகத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வானது ஓரு மணி நேரம் நடைபெறும். இந்த இணைய தேர்வில் நேரில் வந்து கலந்துகொள்ளும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் பல்வேறு குழுக்களாக பிரித்து நடத்தப்படும் என்றார்.

வேலை வாய்ப்பு

தொடர்ந்து கலெக்டர் லலிதா பேசுகையில், இந்த பயிற்சி முடிந்து தேர்வு நடத்தப்படும். தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு வழங்கப்படும். எனவே மாணவ, மாணவிகள் சாதிக்க வேண்டும் என்ற முனைப்புடன் கவனமாக படிக்க வேண்டும் என்றார்.

இந்த ஆய்வின்போது உதவி கலெக்டர் யுரேகா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரேணுகா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பழனிவேல், நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி, பள்ளி தலைமையாசிரியர் தாமரைச்செல்வன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story