கரும்பு விவசாயிகளுக்கு பயிற்சி


கரும்பு விவசாயிகளுக்கு பயிற்சி
x

கச்சிராயப்பாளையத்தில் கரும்பு விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி -2 கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் கடலூர் கரும்பு ஆராய்ச்சி நிலையம் சார்பில் களப்பணியார்கள் மற்றும் கரும்பு விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் கச்சிராயப்பாளையத்தில் உள்ள ஆலை வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு ஆலையின் மேலாண்மை இயக்குனர் முருகேசன் தலைமை தாங்கினார். கரும்பு பெருக்கு அலுவலர் செந்தில்குமார் வரவேற்றார். இதில் கடலூர் கரும்பு ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்கள் ஜெயச்சந்திரன், தங்கேஸ்வரி, பொற்கொடி ஆகியோர் கலந்து கொண்டு கரும்பு பயிரில் நோய் மற்றும் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது, மண் பராமரிப்பு, ஊட்டச்சத்து மேலாண்மை குறித்து விளக்கி பேசினர். இதில் விவசாயிகள், களப்பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கச்சிராயப்பாளையம் கோட்ட கரும்பு அலுவலர் ஆன்ட்ரன் சேவியர் அருள் நன்றி கூறினார்.


Next Story