அரசு பள்ளியில் ஆசிரியர்களுக்கு பயிற்சி


அரசு பள்ளியில் ஆசிரியர்களுக்கு பயிற்சி
x

சங்கராபுரம் அரசு பள்ளியில் ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் குறித்த பயிற்சி நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்,

சங்கராபுரம் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் குறித்த பயிற்சி சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதற்கு வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) கவிதா தலைமை தாங்கினார். உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனியாப்பிள்ளை, தலைமையாசிரியர் சீனிவாசன், வட்டார கல்வி அலுவலர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மைய ஒருங்கிணைப்பாளர் பால்ராஜ் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி கலந்து கொண்டு 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு பயிற்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பயிற்சியின் நோக்கம் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து விளக்கி கூறினார். இதில் ஆசிரியர் பயிற்றுனர்கள் சரஸ்வதி, மலர்க்கொடி, குப்புசாமி, ஸ்டாலின் மற்றும் 160-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி 5 நாட்கள் நடைபெற உன்ளது.


Next Story