கிராம குடிநீர், சுகாதார மேலாண்மை உறுப்பினர்களுக்கு பயிற்சி


கிராம குடிநீர், சுகாதார மேலாண்மை உறுப்பினர்களுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 30 July 2023 12:15 AM IST (Updated: 30 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் யூனியன் அலுவலகத்தில் கிராம குடிநீர், சுகாதார மேலாண்மை உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தகவல் தொடர்பு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு, ஜல்ஜீவன் மிஷன் சார்பில் களநீர் பரிசோதனை கருவியை பயன்படுத்தி கிராம குடிநீர் மற்றும் சுகாதார உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் சாத்தான்குளம் யூனியன் அலுவலகத்தில் நடந்தது. குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் கோபால் வழிக்காட்டுதலின்படி நடந்த இக்கூட்டத்துக்கு தூத்துக்குடி மாவட்ட நிர்வாக பொறியாளர் ராஜா தலைமை தாங்கினார். உதவி நிர்வாக பொறியாளர் ஜான் செல்வன் முன்னிலை வகித்தார். பயிற்சியை வட்டார வளர்ச்சி அலுவலர் கருப்பசாமி, ஒன்றிய ஆணையாளர் சுரேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் தண்ணீர் தரம், தண்ணீர் பகுப்பாய்வு, சுத்தமான குடிநீர், மற்றும் தண்ணீர் பாதுகாப்பு, தண்ணீர் சேகரிப்பு, வேதியியல் பாக்டீரியாக்கள் சம்பந்தப்பட்ட ரசாயனங்களை எவ்வாறு கண்டறிவது குறித்து அளிக்கப்பட்டது.


Next Story