காமாட்சிபுரத்தில் உணவு பொருட்கள் பதப்படுத்துதல் பயிற்சி
காமாட்சிபுரம் வேளாண் அறிவியல் மையத்தில் உணவு பொருட்கள் பதப்படுத்துதல் பயிற்சி நடைபெற்றது.
தேனி
சின்னமனூர் அருகே உள்ள காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் நவீன எந்திரம் மூலம் பல்வகை உணவு பொருட்களை பதப்படுத்தும் பயிற்சி நடந்தது. பயிற்சியை அறிவியல் மைய தலைவர் பச்சைமால் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன், தொழில் நுட்ப வல்லுனர் ரம்யா சிவசெல்வி பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து பேசினர்.
அரியானா மாநிலத்தைச் சேர்ந்த இளம் கண்டுபிடிப்பாளர்கள் பிரின்சி, நிட்டின் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நவீன எந்திரத்தின் பயன்பாடுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தனர். அத்தி மிட்டாய், திராட்சை சாறு, தக்காளிகெச்சப், சோற்றுக்கற்றாழைசாறு மற்றும் மூலிகை பொருட்கள் தயாரிப்பு போன்றவை குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் விவசாயிகள் தொழில் முனைவோர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story