மதிப்புக்கூட்டும் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி


மதிப்புக்கூட்டும் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி
x
தினத்தந்தி 3 Feb 2023 12:30 AM IST (Updated: 3 Feb 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

சின்னமனூர் அருகே வேளாண் அறிவியல் மையத்தில் மதிப்புக்கூட்டும் பொருட்கள் தயாரித்தல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

தேனி

சின்னமனூர் அருகே காமாட்சிபுரத்தில் உள்ள சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் வாழையில் இருந்து மதிப்புக்கூட்டும் பொருட்கள் தயாரித்தல் பற்றிய 2 நாள் பயிற்சி நடந்தது. திட்ட ஒருங்கிணைப்பாளர் (பொறுப்பு) மகேஸ்வரன் வரவேற்றார். அறிவியல் மைய தலைவர் பச்சைமால் தலைமை தாங்கி பயிற்சியின் நோக்கம் குறித்து பேசினார். இதில், வாழைக்காய் மாவு, வாழைக்காய் சிப்ஸ், வாழைக்காய் ஊறுகாய், வாழைப்பழச்சாறு மற்றும் வாழையில் இருந்து கைவினைப் பொருட்கள் தயாரித்தல் போன்றவை தொடர்பான தொழில்நுட்பங்களை அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் விளக்கினர். மாவட்ட தொழில் மைய அலுவலர் ஹரிகிருஷ்ணன், பிரதமரின் உணவு பதப்படுத்தும் திட்டங்கள் மற்றும் மானியங்கள் பற்றி விளக்கமளித்தார். பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. முடிவில் தொழில்நுட்ப வல்லுனர் சபரிநாதன் நன்றி கூறினார்.


Next Story