காளான் வளர்ப்பு தொழில்நுட்ப பயிற்சி
ஆலத்தூர் ஊராட்சியில் காளான் வளர்ப்பு தொழில்நுட்ப பயிற்சி நடந்தது.
திட்டச்சேரி:
திருமருகல் ஒன்றியம் ஆலத்தூர் ஊராட்சி அருள்மொழிதேவன் கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் காளான் வளர்ப்பு தொழில்நுட்ப பயிற்சி நடந்தது. பயிற்சிக்கு திருமருகல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொறுப்பு)கலைச்செல்வன் தலைமை தாங்கினார். ஆலத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்ரமணியன் வரவேற்றார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் மகேஸ்வரி இன்றைய காலக்கட்டத்தில் காளான் வளர்ப்பின் அவசியம், அதன் முக்கியத்துவம் பற்றி எடுத்து கூறினார். சிக்கல் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் சந்திரசேகரன் காளான் வளர்ப்பு தொழில்நுட்பங்கள் பற்றி செயல்முறை விளக்கம் அளித்தார். துணை வேளாண்மை அலுவலர் தெய்வகுமார் வட்டாரத்தில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து எடுத்து கூறினார். இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் சிந்து மற்றும் உதவி தொழில் நுட்ப மேலாளர் பிரபு ஆகியோர் செய்திருந்தனர்.