பயனாளிகளுக்கு ஆடுகள் வாங்குவது குறித்த பயிற்சி
விருத்தாசலத்தில் பயனாளிகளுக்கு ஆடுகள் வாங்குவது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
விருத்தாசலம்,
கிராமப்புற பெண்களை தொழில் முனைவோர் ஆக்கும் திட்டத்தின் கீழ் விருத்தாசலம் ஒன்றியத்தை சேர்ந்த 100 பயனாளிகளுக்கு விருத்தாசலம் கால்நடை மருந்தகத்தில் தரமான ஆடுகள் வாங்குவது குறித்த பயிற்சி நடைபெற்றது. இதற்கு கடலூர் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் குபேந்திரன் தலைமை தாங்கி எந்தமாதிரியான ஆடுகளை வாங்க வேண்டும் என்பது பற்றி விளக்கி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
கடலூர் கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி துணை இயக்குனர் டாக்டர் பொன்னம்பலம் நோய் தடுப்பு முறைகள் குறித்து விளக்கி பேசினார். விருத்தாசலம் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் டாக்டர் பெரியசாமி ஆடுகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பது பற்றி விளக்கி கூறினார். இதில் கால்நடை உதவி மருத்துவர்கள் சரவணன், நந்தகுமார், பாவுலின் பெலிசிட்டா சுகந்தி, வேல்முருகன், முத்து விருத்தகிரி, சேட்டு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் டாக்டர் சரவணன் நன்றி கூறினார்.