வாழை மரம் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி


வாழை மரம் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 24 Oct 2022 12:15 AM IST (Updated: 24 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பொட்டியம் ஊராட்சியில் வாழை மரம் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம்

திருச்சியில் உள்ள மத்திய ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மையத்தின் சார்பில் கல்வராயன்மலை அடிவாரம் பொட்டியம் ஊராட்சியில் வாழை மரம் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி மற்றும் செயல் விளக்கம் நடைபெற்றது. இதற்கு பயிர் பாதுகாப்பு மையத்தின் துணை இயக்குநர் இளங்கோவன் தலைமை தாங்கினார். பயிர் பாதுகாப்பு அதிகாரி கோவிந்தராஜ் மற்றும் வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில் உதவி வேளாண்மை அலுவலர்கள் குமரேசன், சிவா ஆகியோர் சிறப்புரையாற்றினா்.

பயிற்சியில் நிலம் பதப்படுத்துதல் முதல் வாழை அறுவடை வரை பயிரில் உள்ள பயிர் பாதுகாப்பு தொழில் நுட்பங்கள், தண்டு மற்றும் கிழங்குகளை துளைக்கும் கூன் வண்டு, சாறு உறிஞ்சும் பூச்சி, இலைப்புள்ளி நோய், நூற்புழுக்கள் மற்றும் பிற பூச்சிகள் மற்றும் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையில் நோய்களை கட்டுப்படுத்துவது குறித்தும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். முடிவில் மத்திய ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மையத்தின் தொழில்நுட்ப வல்லுநர் சுருளிராஜன் நன்றி கூறினார்.


Next Story