பாளையங்கோட்டையில்கரும்பு சாகுபடியை அதிகரிக்க விவசாயிகளுக்கு பயிற்சி
பாளையங்கோட்டையில் கரும்பு சாகுபடியை அதிகரிக்க விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
சேத்தியாத்தோப்பு,
சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் கடலூர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் கரும்பு ஆராய்ச்சி நிலையம், கோவை பயிர்வினையியல் துறை வேளாண் பல்கலைக்கழகம் ஆகியன சார்பில் கரும்பு சாகுபடியை அதிகரிக்க செய்யும் வகையில் விவசாயிகளுக்கான செயல் விளக்கம் மற்றும் பயிற்சி முகாம் பாளையங்கோட்டை கீழ்ப்பாதி கிராமத்தில் நடைபெற்றது.
இதற்கு கடலூர் கரும்பு ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் சசிகுமார் தலைமை தாங்கினார். ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் சுப்பிரமணியன், கோவை இணை பேராசிரியர் ஸ்ரீதர், எம். ஆர். கே. கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைமை கரும்பு அலுவலர் ரவி கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் சதீஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். முகாமில் கரும்பு சாகுபடியை ஊக்குவித்தல், அதனால்கிடைக்கும் பயன்கள் குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் சிவசங்கரன், ராஜவேல், கரும்பு அலுவலர்கள் விஜயன், ராஜதுரை, கரும்பு உதவியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் செல்வம் நன்றி கூறினார்.