அட்மா திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி


அட்மா திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி
x

விலாரி கிராமத்தில் அட்மா திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

ராணிப்பேட்டை

கலவையை அடுத்த விலாரி கிராமத்தில் திமிரி வட்டார வேளாண்மைத் துறை சார்பில் அட்மா திட்டத்தின் மூலம் நெல் பயிர் சாகுபடியில் சுற்றுச்சூழல் பகுப்பாய்வு பண்ணை பள்ளி பயிற்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை வேளாண்மை உதவி இயக்குனர் ராமன் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி, துணைத்தலைவர் சந்திரகலா ஆகியோர் தலைமை தாங்கினர். வேளாண்மை அலுவலர் திலகவதி நெற்பயிரில் சுற்றுச்சூழல் பூச்சி மேலாண்மை பற்றியும், மண்புழு ஊடகங்களின் பயன்கள் பற்றியும் எடுத்துக் கூறினார். அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் பசுந்தாள் உரம் பற்றியும், நெல் விதை நேர்த்தி பற்றியும் எடுத்துக் கூறினார். உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் கோபாலகிருஷ்ணன், தாமோதரன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.


Next Story