அரசு பள்ளி வழிகாட்டல் குழுவினருக்கு பயிற்சி


அரசு பள்ளி வழிகாட்டல் குழுவினருக்கு பயிற்சி
x
தினத்தந்தி 28 April 2023 12:15 AM IST (Updated: 28 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் அரசு பள்ளி, வழிகாட்டல் குழுவினருக்கு பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது.

நீலகிரி

ஊட்டி

ஊட்டியில் அரசு பள்ளி, வழிகாட்டல் குழுவினருக்கு பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது.

வழிகாட்டல் குழு

தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்களை கண்டறிந்து தேர்ச்சி பெற வைக்கவும், தேர்ச்சி பெற்றவர்களுக்கு உயர்கல்வி குறித்து வழி காட்டவும் ஒவ்வொரு பள்ளிக்கும் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த குழுவில் பள்ளி தலைமை ஆசிரியர், உயர்கல்வி வழிகாட்டல் பயிற்சி பெற்ற ஆசிரியர், பள்ளி மேலாண்மை குழு தலைவர், துணை தலைவர், பள்ளியின் முன்னாள் மாணவர், கல்லூரியில் படிக்கும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவ- மாணவிகள் இடம் பெற்று உள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி அளவிலான இந்த வழிகாட்டல் குழுவினருக்கான பயிற்சி முகாம் ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு வந்தவர்களை வட்டார வள மைய மேற்பார்வையாளர் சகாய மேரி ஷீலா வரவேற்றார். முதன்மை கல்வி அலுவலர் முனியசாமி தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் சரஸ்வதி, உதவி திட்ட அலுவலர் அர்ஜூணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உயர்கல்வி

இந்த நிகழ்ச்சியில் கோத்தகிரி ஆசிரியர் பயிற்சி நிலைய விரிவுரையாளர் மற்றும் மாநில கருத்தாளர் வசந்தாமணி, முதுகலை ஆசிரியர் சுரேஷ்குமார் ஆகியோர் கல்லூரி கனவு என்ற தலைப்பில் மாணவர்களிடம் பேசினர். இதைத் தொடர்ந்து ஊட்டி வட்டார ஒருங்கிணைப்பாளர் ரீனா இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்தும், வட்டார வள மைய மேற்பார்வையாளர் சகாய மேரி ஷீலா பள்ளி செல்லா குழந்தைகள் குறித்தும் பேசினர்.

இதை தொடர்ந்து 10-ம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு உள்ள உயர் கல்வி வாய்ப்புகளான பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., பாராமெடிக்கல், குறுகிய கால படிப்புகள் குறித்தும், இவற்றில் உள்ள பணி வாய்ப்புள்ள படிப்புகள் குறித்தும், 12-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு உள்ள உயர்கல்வி வாய்ப்புகளான பொறியியல் படிப்புகள், மருத்துவம், பட்டபடிப்புகள்குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

பொது நுழைவுத்தேர்வு

மேலும் ஜே.இ.இ., நீட், எய்ம்ஸ் உள்ளிட்ட பொது நுழைவு தேர்வுகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்தும் தெரிவிக்கப்பட்டது. பல்வேறு திறனறி தேர்வுகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது.

இந்த பயிற்சியை பெற்ற வழிகாட்டி குழுவினர் வரும் 8-ந் தேதி பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடும் தினத்தன்று அந்தந்த பள்ளிகளில் அரங்கு அமைத்து மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் வகுப்பு நடந்த உள்ளனர்.

பயிற்சி வகுப்பில் ஊட்டி, நஞ்சநாடு, சோலூர், தாவணெ, அணிக்கொரை, தும்மனட்டி, தூனேரி, ஏகலைவா அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளிகளை சேர்ந்த வழிகாட்டல் குழுவினர் பங்கேற்றனர்.


Next Story