தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி


தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி
x

நெமிலி வட்டார வள மையத்தில் தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி நடைபெற்றது.

ராணிப்பேட்டை

நெமிலி வட்டார வள மையத்தில் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான வழிகாட்டி பயிற்சி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா மற்றும் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பிரேமலதா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை நடைமுறையில் உள்ள எண்ணும் எழுத்தும் திட்டத்தை மேலும் சிறப்பாக நடத்துவது குறித்தும், மாணவர்களின் கற்றல் மற்றும் எழுதுதல் திறனை அதிகரித்தல், கற்றல் உபகரணங்களை அதிக அளவில் பயன் படுத்துதல், கற்றல் கற்பித்தலில் கூடுதல் கவனம் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சி மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

மேலும் மாணவர்களை அரும்பு, மொட்டு, மலர் என தரம் பிரித்து அவர்களின் கற்றல் திறனை அதிகரித்து அரும்பு நிலையில் உள்ள மாணவர்களை மலர் நிலைக்கு கொண்டு வர கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் நெமிலி வட்டார கல்வி அலுவலர்கள் மீனாட்சி, அரசு, வட்டார மேற்பார்வையாளர் பாலாஜி, நெமிலி மற்றும் அரக்கோணம் வட்டார ஆசிரிய பயிற்றுனர்கள் 90-க்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story