தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி


தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி
x

திருப்பத்தூரில் தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி 2 கட்டங்களாக நடந்தது.

திருப்பத்தூர்


அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கான அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுக்க புதிய திட்டம் (ஸ்டெம்) தமிழக அரசின் சார்பில் தொடங்கப்பட இருக்கிறது.

இத்திட்டம் குறித்த நோக்கத்தை விளக்குவதற்கான பயிற்சி திருப்பத்தூரில் நடந்தது. அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், வட்டாரக் கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் உள்ளிட்ட அலுவலர்களுக்கு 2 கட்டங்களாக பயிற்சி நடைபெற்றது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்துடன் இணைந்து திருப்பத்தூர் மாவட்ட பள்ளிக்கல்வி நிர்வாகம் நடத்திய இப்பயிற்சியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் தொடங்கி வைத்தார்.

மாவட்ட உதவி திட்ட அலுவலர் பிரபாகரன், அறிவியல் இயக்க மாவட்ட கவுரவத் தலைவர் அச்சுதன், துணைத்தலைவர் துரைமணி, துணை செயலாளர் செண்பகவள்ளி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். மாவட்ட துணை செயலாளர் முருகன் பயிற்சி கருத்தாளராக செயல்பட்டார்.

சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சுப்பிரமணி கலந்து கொண்டு மாணவர்களை அறிவியல் மனப்பான்மை கொண்டவர்களாக ஏன் மாற்ற வேண்டும், அதை எவ்வாறு சாதிக்க முடியும் என்பது குறித்து விளக்கி பேசினார்.

இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story