போலீசாருக்கு உயிர் காக்கும் சிகிச்சை குறித்த பயிற்சி
மயிலாடுதுறையில் போலீசாருக்கு உயிர் காக்கும் சிகிச்சை குறித்த பயிற்சி நடந்தது.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீசாருக்கு உயிர் காக்கும் அவசர சிகிச்சை குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா உத்தரவின்பேரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் தலைமை தாங்கினார். இதில், உயிர்களைக் காப்பாற்றுவதில் கோல்டன் ஹவர்ஸ் எனப்படும் அவசர சிகிச்சை அளிப்பது குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சியை, எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வெங்கடேஷ்பாபு போலீசாருக்கு வழங்கினார். இப்பயிற்சியில் மருத்துவ விரிவுரைகள், செயற்கை மனிதனின் உயிர்காக்கும் திறன் பற்றிய பயிற்சிகள் வழங்கப்பட்டது. இதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆண் மற்றும் பெண் போலீசார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story