பாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கு பயிற்சி
பாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
சிவகாசி,
தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 2023-2024 கல்வி ஆண்டு முதல் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதன் முதல் கட்டமாக தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் பாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கு 5 நாள் சிறப்பு பயிற்சி வகுப்புகள் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில் நுட்பம் மற்றும் அதன் பயன்பாடுகள் பற்றிய பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. இதில் சிவகங்கை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் இருந்து 51 மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர். பயிற்சி வகுப்பு ஏற்பாடுகளை மின்னணுதுறை தலைவர் மோசஸ் டேனியல் பிரபாகர், ஒருங்கிணைப்பாளர்கள் முருகேசன், ராமசுப்பிரமணியன் ஆகியோர் செய்திருந்தனர்.