கிராம பயிற்றுனர்களுக்கு திட்டப்பணிகளை தணிக்கை செய்யும் பயிற்சி


கிராம பயிற்றுனர்களுக்கு திட்டப்பணிகளை தணிக்கை செய்யும் பயிற்சி
x

கிராம பயிற்றுனர்களுக்கு திட்டப்பணிகளை தணிக்கை செய்யும் பயிற்சி நடந்தது.

கரூர்

கடவூர் ஊராட்சி ஒன்றியத்தில் 100 நாள் திட்டப்பணிகளை தணிக்ைக செய்யும் கிராம பயிற்றுனர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய ஆணையர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் 2020- 2021 மற்றும் 2021-2022-ம் ஆண்டுகளில் ஊராட்சியில் நடந்த பணியில் 100 நாள் பணியாளர்களின் பணி விவரங்கள், மொத்த செலவீனம் மற்றும் பணியாளர்களின் ஊதியத்தின் விவரங்கள் ஆகியவற்றை சமூக தணிக்கை செய்ய வேண்டும், ஊராட்சி வளர்ச்சிகளுக்கான புதிய பணிகளை தேர்வு செய்தல், ஆய்வு அறிக்கைகளை அந்தந்த ஊராட்சியில் நடைபெறும் சமூக தணிக்கை மற்றும் சிறப்பு கிராமசபை கூட்டத்தில் ஒப்புதல் பெற்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதில் கிராம பயிற்றுனர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story