பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி
பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி நடந்தது.
கரூர்
வேட்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. பயிற்சி முகாமிற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் தேன்மொழி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக ஆசிரிய பயிற்றுனர் கல்யாணி கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் எண்ணும் எழுத்தும், இல்லம் தேடி கல்வி, தகவல் உரிமைச் சட்டம், குழந்தைகள் உதவி எண் 1098, மற்றும் வேட்டமங்கலம் கிராமத்தை இடைநிற்றல் இல்லாத கிராமமாக மாற்ற வேண்டும் என்பது பற்றி பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது. மேலும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இதில், பள்ளி தலைமை ஆசிரியை ராணி, ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story