வாழ்ந்துகாட்டுவோம் திட்டத்தின் கீழ் செயலர்களுக்கு பயிற்சி


வாழ்ந்துகாட்டுவோம் திட்டத்தின் கீழ் செயலர்களுக்கு பயிற்சி
x

வாழ்ந்துகாட்டுவோம் திட்டத்தின் கீழ் செயலர்களுக்கு பயிற்சி

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சார்பில் செயலர்களுக்கு 2 நாள் பயிற்சி தொடங்கியது. வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல்அலுவலர் வேல்முருகன் வரவேற்றார்.பயிற்சியை மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசுகையில், டிஜிட்டல் முறையில் கணக்குகளை பராமரிப்பது குறித்த பயிற்சி நாகை, மயிலாடுதுறை, கடலூர் மற்றும் திருவாரூர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த திட்ட செயலர்கள், முதன்மை தொழில்சார் சமூக வல்லுனர்கள் 40 பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மின்னணு முறையில் வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் தொழில் முனைவோர் விரைவில் வங்கி மூலம் கடனுதவி பெற்று தொழிலை விரிவுப்படுத்தவும், திட்டத்தின் அனைத்து வங்கி பணிகளுக்கும் இப்பயிற்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும். எனவே, இப்பயிற்சியை 4 மாவட்டங்களை சேர்ந்த திட்ட செயலர்கள் நல்ல முறையில் கற்று கொண்டு தொழில் முனைவோர்களை உருவாக்க வேண்டும் என்றார். இதில் முன்னோடி வங்கி மேலாளர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story