வீட்டு காய்கறி தோட்டம் குறித்து பயிற்சி
ஊட்டி அருகே விவசாயிகளுக்கு வீட்டு காய்கறி தோட்டம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
ஊட்டி,
ஊட்டி வட்டார தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) சார்பில், உள் மாவட்ட அளவிலான மாடி தோட்டம், வீட்டு காய்கறி தோட்டம் குறித்த பயிற்சி முகாம் இடுஹட்டி கிராமத்தில் நடைபெற்றது. முகாமில் தோட்டக்கலை உதவி இயக்குனர் அனிதா கலந்துகொண்டு, தோட்டக்கலைத்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விளக்கினார். தோட்டக்கலை அலுவலர் அரவிந்த், தோட்டக்கலை துணை அலுவலர் ஜெயக்குமார் ஆகியோர் பிரதான் மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம் குறித்து எடுத்துரைத்தனர். மேலும் சரவணக்குமார் வேளாண் வணிக துறையில் செயல்படுத்தி வரும் திட்டங்கள் பற்றி கூறினார். காய்கறி பயிர்களில் மதிப்பு கூட்டுதல் பற்றி அட்மா உதவி தொழில்நுட்ப மேலாளர் அஸ்வினி பயிற்சிகள் மற்றும் செயல்முறை விளக்கம் அளித்தார். இதில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.