அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு குறித்து பயிற்சி


அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு குறித்து பயிற்சி
x

அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு குறித்து பயிற்சி நடந்தது.

கரூர்

தோகைமலை ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு குறித்து ஒரு நாள் பயிற்சி நடந்தது. இதற்கு ஒன்றிய ஆணையர்கள் சரவணன், விஜயகுமார் ஆகியோர் தலைமை தாங்கினர். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திருஞானம் கலந்து கொண்டு பயற்சி அளித்தார். இதில், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு படிவம் பூர்த்தி செய்தல்,வழிகாட்டு நெறிமுறைகள் போன்ற பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் கணக்கெடுப்பு குழுவினர்களான ஊராட்சி மன்ற தலைவர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள், ஊராட்சி மன்ற செயலாளர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளின் பிரதிநிதிகள மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story