காளான் வளர்ப்பு குறித்து பெண்களுக்கு பயிற்சி


காளான் வளர்ப்பு குறித்து பெண்களுக்கு பயிற்சி
x

காளான் வளர்ப்பு குறித்து பெண்களுக்கு வேளாண் கல்லூரி மாணவிகள் பயிற்சி அளித்தனர்.

திண்டுக்கல்

தேனி வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் 4-ம் ஆண்டு பயிலும் மாணவிகள் கிராம தங்கல் திட்டத்தின்கீழ் கொடைக்கானல் கீழ்மலை பகுதியான தாண்டிக்குடியில் விவசாய நிலங்களை பார்வையிட்டு பயிற்சி பெற்றனர். இந்தநிலையில் அங்குள்ள விக்ரோ மொட்டு என்ற காளான் பண்ணையில் 30 பெண்களுக்கு காளான் வளர்ப்பு குறித்து கல்லூரி மாணவிகள் பயிற்சி அளித்தனர்.

அப்போது காளான் வளர்ப்பு, உற்பத்தி, சந்தைப்படுத்துதல் குறித்தும், காளான் எவ்வாறு சாகுபடி செய்வது, அவற்றை பராமரித்து எவ்வாறு அறுவடை செய்வது, காளான் விதை உற்பத்தி செய்வது மற்றும் அதன் தொழில்நுட்பங்கள் குறித்து மாணவிகள் பயிற்சி அளித்தனர். இதில், 20-க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் காளான் பண்ணை உரிமையாளர் மணிவண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


Next Story