நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த பயிற்சி
நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த பயிற்சி நடக்கிறது.
மண்மங்கலம் அருகே பண்டுதகாரன்புதூரில் உள்ள கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த ஒரு நாள் இலவசப்பயிற்சி வருகிற 31-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. பயிற்சியில் நாட்டுக்கோழி இனங்கள், வளர்ப்பு முறைகள், தீவனம் மற்றும் குடிநீர் பராமரிப்பு, நாட்டுக்கோழிகளை தாக்கும் நோய்கள் மற்றும் அவற்றை தடுக்கும் முறைகள், மூலிகை மருத்துவ முறைகள், விற்பனை உத்திகள் மற்றும் பண்ணைப் பொருளாதாரம் ஆகிய தலைப்புகள் குறித்து பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் நிபுணர்களால் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் நேரடியாக 31-ந்தேதி காலை 10.30 மணிக்குள் வந்து பயிற்சியில் கலந்து கொள்ளலாம். மேற்கண்ட தகவலை கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் அருணாசலம் கேட்டுக்கொண்டுள்ளார்.