சம்பா நெல் சாகுபடி குறித்த பயிற்சி
சம்பா நெல் சாகுபடி குறித்த பயிற்சி
நாகப்பட்டினம்
நாகை அருகே உள்ள சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுக்கான கவுரவ நிதியின் 14-வது தவணை வழங்கும் விழா, சம்பா நெல் சாகுபடி குறித்த பயிற்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வேளாண்மை அறிவியல் நிலைய தொழில் நுட்ப வல்லுனர் ரகு தலைமை தாங்கினார். நெல்சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி குறித்து தொழில்நுட்ப வல்லுனர் கண்ணன் பயிற்சி அளித்தார்.
நிகழ்ச்சியில் காணொலிக்காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளுக்கான கவுரவ நிதியின் 14-வது தவணையினை வெளியிட்டார். தொடர்ந்து ஆதி திராவிடர் வகுப்பை சேர்ந்த விவசாயிகளுக்கு நெல்விதைகள் வழங்கப்பட்டன. இதில் நாகை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், கிராமப்புற இளைஞர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வேளாண்மை அறிவியல் நிலைய மேலாளர் வேதரத்தினம் செய்திருந்தார். முடிவில் தொழில் நுட்ப வல்லுனர் சந்திரசேகர் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story