ஊராட்சி தலைவர்களுக்கு பயிற்சி
ஊராட்சி தலைவர்களுக்கு பயிற்சி
உடுமலை,
பள்ளி மேலாண்மை குழு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து, பள்ளி கல்வித்துறையின் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் மூலம் ஊராட்சி தலைவர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது. உடுமலை ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி தலைவர்களுக்கு உடுமலை சர்தார் வீதியில் உள்ள நகராட்சி எக்ஸ்டன்சன் நடுநிலைப்பள்ளியிலும்
(பூங்கா பள்ளி), மடத்துக்குளம் மற்றும் குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி தலைவர்களுக்கு உடுமலை தளிசாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் பயிற்சி முகாம்நடந்தது.
அப்போது பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களின் பணிகள், கடமைகள், பள்ளி மேம்பாட்டு திட்டம், கட்டாய கல்விஉரிமைசட்டம், குழந்தைகள் பாதுகாப்பு ஆகியவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. முகாமில் கருத்தாளர்களாக சுரேஷ், பாபு, ரேவதி, பிலோமினாஆகியோர்செயல்பட்டனர். பயிற்சியை உடுமலை வட்டார கல்வி அலுவலர் மனோகரன் தொடங்கி வைத்தார்.பயிற்சி முகாமை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கரோலின், உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை ஆகியோர் பார்வையிட்டனர்.உடுமலை வட்டார வள மைய மேற்பார்வையாளர் சண்முகசுந்தரம் நன்றிகூறினார்.