ஆயக்குடியில் தீவனப்பயிர் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி


ஆயக்குடியில் தீவனப்பயிர் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 12 Aug 2023 3:00 AM IST (Updated: 12 Aug 2023 3:00 AM IST)
t-max-icont-min-icon

ஆயக்குடியில் தீவனப்பயிர் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

திண்டுக்கல்

பழனி வாகரை அரசு மக்காச்சோள ஆராய்ச்சி நிலையம் சார்பில், ஆயக்குடியில் தீவனப்பயிர் சாகுபடி மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி முகாமிற்கு ஒருங்கிணைந்த பண்ணைய திட்ட அதிகாரி சதீஷ்குமார் தலைமை தாங்கினார். இளநிலை வேளாண் அலுவலர் பாடலீஸ்வரன் முன்னிலை வகித்தார். பண்ணைய திட்ட அதிகாரி சதீஷ்குமார் பேசும்போது, ஆடு, மாடு வளர்ப்பில் பசுந்தீவன பயிர் மேலாண்மை செய்வது, கம்பு நேப்பியர், தீவன புல், வேலி மசால், அகத்தி ஆகிய சாகுபடி முறை, அதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார். மேலும் கால்நடைகளுக்கு தாதுஉப்பு கலவை அளிக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து பேசினார். முடிவில் விவசாயிகள் அனைவருக்கும் தீவனப்பயிர் விதைகள், தாது உப்பு கலவை ஆகியவற்றை வழங்கினார். இந்த பயிற்சியில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.


Related Tags :
Next Story