உடுமலையில் விவசாயிகளுக்கு பயிற்சி
உடுமலையில் விவசாயிகளுக்கு பயிற்சி
உடுமலை
தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் உடுமலை மின் பகிர்மான வட்டம்சார்பில், விவசாயிகள், விவசாயத்திற்கான மின்சாரத்தை சிக்கனப்படுத்துதல் மற்றும் மின்திறன் விழிப்புணர்வு குறித்து ஒருநாள் முகாம் உடுமலை ஏரிப்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.முகாமிற்கு உடுமலை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சீ.விஸ்வநாதன் தலைமை தாங்கி பேசினார். செயற்பொறியாளர் (பொது) டி.சந்திரசேகரன் , விவசாயத்துறையில் மின் ஆற்றல் குறித்து பேசினார்.
முகாமில் மின்தேவை வழங்கல் மேலாண்மை மற்றும் மின்பாதுகாப்பு குறித்து கோவை தொழில்நுட்ப பயிற்சி மைய முதுநிலை மேலாளர் என்ஜினியர் ரங்கநாதன், பம்புகள் தேர்வு செய்தல், நிறுவுதல் மற்றும் திறமையான செயல்பாட்டுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் பம்புசெட்டுகள் செயல்பாடு, பழுதுமற்றும்
பராமரிப்பு, ஆற்றல் திறன் கொண்ட பம்புகள் ஆகியவை குறித்து அக்வா சப் என்ஜினீயரிங் ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு துணைத்தலைவர் முருகேசன் பேசினார்.
விவசாய இணைப்புகளுக்கு சூரிய ஒளி மின்சக்தி குறித்து திருப்பூர் டி.இ.டி.ஏ.உதவி பொறியாளர் என்.முரளிதரன் ஆகியோர் பயிற்சியளித்துபேசினர். இதைத்தொடராந்து மின்பொறியாளர்கள் விவசாயிகள் கலந்துரையாடல் நடந்தது.உடுமலை மின் பகிர்மான வட்ட மக்கள் தொடர்பு அலுவலர் என்ஜினியர் என்.மோகன் நன்றி கூறினார்.பயிற்சி முகாமில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
--------------
3 காலம்