10 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்
வேலூர் சரகத்தில் 10 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர் சரகத்தில் 10 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
10 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள்
வேலூர் போலீஸ் டி.ஐ.ஜி. சரகத்துக்கு உட்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்த 10 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்விவரம் வருமாறு:-
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த சாலமோன்ராஜா ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்துக்கும், ராணிப்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் பணிபுரிந்த மகாலட்சுமி கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்துக்கும், ேவலூா் மாவட்டம் பொன்னை போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த மனோன்மணி திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், அங்கு பணிபுரிந்த கோமதி திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பணியிட மாற்றம்
இதேபோன்று காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஸ்ரீதர் பொன்னை போலீஸ் நிலையத்துக்கும், ஆனந்தன் திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் போலீஸ் நிலையத்துக்கும், அரக்கோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த மங்கையர்கரசி திமிரி போலீஸ் நிலையத்துக்கும், அங்கு பணிபுரிந்த லதா அரக்கோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், மருத்துவ விடுமுறையில் சென்றுள்ள அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த சீனிவாசன் மற்றும் தேசூர் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த முனீஸ்வரன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. (பொறுப்பு) சத்யபிரியா பிறப்பித்துள்ளார்.