தமிழகத்தில் 16 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் 16 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் வெ. இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அபூர்வா, ஹிதேஸ்குமார் மக்வானா, அதுல்யா, எஸ்.ஜே.சிரு, ஆபிரகாம், சரவண வேல்ராஜ், ஜான் லூயிஸ், செல்வராஜ், லில்லி, நந்தகோபால், கிரண் குராலா, பழனிசாமி உள்ளிட்ட 16 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தலைமை செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
* இளைஞர் நலன் விளையாட்டுத்துறை செயலாளராக அதுல்ய மிஸ்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக ஜான் லூயிஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* விளையாட்டுத்துறை செயலாளராக இருந்த அபூர்வா வீட்டு வசதி துறை மற்றும் நகர்ப்புற துறையின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Related Tags :
Next Story