டாஸ்மாக் மேலாளர் உள்பட 27 அதிகாரிகள் இடமாற்றம்
டாஸ்மாக் மேலாளர் உள்பட 27 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
சேலம்
சேலம் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ராஜா, விழுப்புரம் தாட்கோ மாவட்ட மேலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றிய தாட்கோ மேலாளர் குப்புசாமி, சேலம் மாவட்ட டாஸ்மாக் மேலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல், சேலம் மாவட்ட வழங்கல் அலுவலர் அமுதன், சங்ககிரி பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் ஒருங்கிணைப்பு அலுவலராகவும், ஈரோடு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் தியாகராஜன், சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டல உதவி ஆணையாளராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் துணை கலெக்டர்கள் பதவியில் உள்ள 27 அதிகாரிகள் வெவ்வேறு பதவிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை அரசு முதன்மை செயலாளர் குமார் ஜயந்த் பிறப்பித்துள்ளார்.
Related Tags :
Next Story