விழுப்புரம் மாவட்டத்தில்33 துணை தாசில்தார்கள் இடமாற்றம்
விழுப்புரம் மாவட்டத்தில் 33 துணை தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டனா்.
விழுப்புரம் மாவட்டத்தில் துணை தாசில்தார் நிலையில் பணியாற்றி வரும் 33 பேர் மாவட்டத்திற்குள் வெவ்வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி வானூர் வட்ட வழங்கல் அலுவலர் ராமகிருஷ்ணன் விழுப்புரம் டாஸ்மாக் உதவி மேலாளராகவும், மரக்காணம் தேர்தல் துணை தாசில்தார் ராஜகுமார் திருவெண்ணைநல்லூர் மண்டல துணை தாசில்தாராகவும், அங்கிருந்த புருஷோத்தமன் திருவெண்ணைநல்லூர் வட்ட வழங்கல் அலுவலராகவும், திருவெண்ணைநல்லூர் வட்ட வழங்கல் அலுவலர் கனிமொழி விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளராகவும், வானூர் தலைமையிடத்து துணை தாசில்தார் யுவராஜ் விக்கிரவாண்டி மண்டல துணை தாசில்தாராகவும், அங்கிருந்த பாரதிதாசன் விழுப்புரம் கலால் உதவி ஆணையர் அலுவலக கண்காணிப்பாளராகவும், விழுப்புரம் டாஸ்மாக் உதவி மேலாளர் ரமேஷ் விக்கிரவாண்டி தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், செஞ்சி தலைமையிடத்து துணை தாசில்தார் ராதாகிருஷ்ணன் திண்டிவனம் மண்டல துணை தாசில்தாராகவும், விக்கிரவாண்டி வட்ட வழங்கல் அலுவலர் வேலு திண்டிவனம் தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், மரக்காணம் மண்டல துணை தாசில்தார் ஹரிதாஸ் விழுப்புரம் தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், விழுப்புரம் தலைமையிடத்து துணை தாசில்தாராக இருந்த லட்சாதிபதி செஞ்சி செம்மேடு ராஜஸ்ரீ சுகர்ஸ் வடிப்பக அலுவலக தனித்துணை தாசில்தாராகவும், இவர்கள் உள்பட மொத்தம் 33 துணை தாசில்தார்கள் மாவட்டத்திற்குள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் பழனி பிறப்பித்துள்ளார்.