9 தாசில்தார்கள் பணியிட மாற்றம்
வேலூர் மாவட்டத்தில் 9 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் 9 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
தாசில்தார்கள் பணியிட மாற்றம்
வேலூர் மாவட்டத்தில் பல்வேறு அரசுத்துறைகள் மற்றும் தாலுகா அலுவலகங்களில் பணிபுரியும் 9 தாசில்தார்கள் நிர்வாக நலன் கருதி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களின் விவரம் வருமாறு:-
பேரணாம்பட்டு சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் விநாயகமூர்த்தி வேலூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக தாசில்தாராகவும் (பறக்கும்படை), அங்கு பணிபுரிந்த கோட்டீஸ்வரன் வேலூர் உதவி கமிஷனர் (கலால்) அலுவலக கண்காணிப்பாளராகவும்,
அங்கு பணிபுரிந்த செல்வி வேலூர் கோவில் நிலங்கள் தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த சுரேஷ்குமார் வேலூர் தாலுகா ஆதிதிராவிடர் நல தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கலெக்டர் உத்தரவு
அதேபோன்று வேலூர் வருவாய் கோட்ட அலுவலர் நேர்முக உதவியாளராக பணிபுரிந்த சுமதி கே.வி.குப்பம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த ரமேஷ் முத்திரைக்கட்டண தாசில்தாராகவும்,
அங்கு பணிபுரிந்த சத்தியமூர்த்தி வேலூர் தாலுகா சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த நரசிம்மன் வேலூர் வருவாய் கோட்ட அலுவலரின் நேர்முக உதவியாளராகவும், வேலூர் தாலுகா தேர்தல்பிரிவு துணை தாசில்தார் சிவசண்முகம் பேரணாம்பட்டு சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக பதவி உயர்வு பெற்று மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் பிறப்பித்துள்ளார்.
புதிய பணியிடத்தில் அனைத்து தாசில்தார்களும் உடனடியாக சேர வேண்டும்.
இல்லையென்றால் அரசு விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நேரிடும். பணியிட மாறுதல் குறித்து மேல்முறையீடோ அல்லது விடுப்பு விண்ணப்பமோ ஏற்று கொள்ளப்படாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.