துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்
நெல்லை மாவட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
நெல்லை மாவட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இடமாற்றம்
நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (மண்டலம்-1) கோமதிதங்கம், பாப்பாக்குடி தலைமையிடத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (ஊராட்சிகள்), தலைமையிடத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) சரோஜா மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை துணை வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கணக்கு), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (கணக்கு) உலகம்மாள், பாப்பாக்குடி தலைமையிடத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (தணிக்கை), மானூர் தலைமையிடத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) திரிபுரசுந்தரி, தலைமையிடத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (தணிக்கை), மானூர் தலைமையிடத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (தணிக்கை) ஏஞ்சலின்லூயிசா, தலைமையிடத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (சத்துணவு), மானூர் தலைமையிடத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) சிவா, அம்பை தலைமையிடத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (சத்துணவு), அம்பை தலைமையிடத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) ரமேஷ் செல்வம், மானூர் தலைமையிடத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (ஊராட்சிகள்) இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
பதவி உயர்வு
பாப்பாக்குடி தலைமையிடத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (தணிக்கை) முருகன், பதவி உயர்வு பெற்று நாங்குநேரி வட்டார வளர்ச்சி அலுவலராக நியமிக்கப்பட்டு உள்ளார். நாங்குநேரி வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன், நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வட்டார வளர்ச்சி அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். கிராம ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றிய முத்துலட்சுமி பதவி உயர்வு பெற்று பாப்பாக்குடி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் பிறப்பித்துள்ளார்.