இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
விருதுநகர் மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சிவகாசி,
விருதுநகர் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்த 8 இன்ஸ்பெக்டர்களை அதிரடியாக இடமாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் உத்தரவிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:- திண்டுக்கல் மாவட்டத்தில் பணியாற்றி வந்த மாரிமுத்து, விருதுநகர் ரூரல் காவல் நிலையத்துக்கும், தேனி மாவட்டத்தில் பணியாற்றி வந்த கவுதமன், சிவகாசி கிழக்கு காவல் நிலையத்துக்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வந்த நம்பிராஜன், வெம்பக்கோட்டை காவல் நிலையத்துக்கும், ராமநாதபுரம் மாவட்டத்தில் பணியாற்றி வந்த நவநீதகிருஷ்ணன், திருத்தங்கல் காவல் நிலையத்துக்கும், திருநெல்வேலி மாவட்டத்தில் பணியாற்றி வந்த சுந்தரமூர்த்தி, சாத்தூர் மதுவிலக்கு பிரிவுக்கும், சி.ஐ.டி. பிரிவில் பணியாற்றி வந்த ஆறுமுகம் வத்திராயிருப்பு காவல் நிலையத்துக்கும், விருதுநகர் மதுவிலக்கு பிரிவில் பணியாற்றி கிரேஸ்ஷோபிபாய் அருப்புக்கோட்டை நகர காவல் நிலையத்துக்கும், சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த மலையரசி, மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.