ஓசூர், ஆலூர், குருபரப்பள்ளி துணை மின் நிலையங்களில் ரூ.9¾ கோடியில் திறன் உயர்த்தும் பணி-முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்


ஓசூர், ஆலூர், குருபரப்பள்ளி துணை மின் நிலையங்களில் ரூ.9¾ கோடியில் திறன் உயர்த்தும் பணி-முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்
x

ஓசூர், ஆலூர், குருபரப்பள்ளி துணை மின் நிலையங்களில் ரூ.9¾ கோடியில் திறன் உயர்த்தும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி

குருபரப்பள்ளி:

மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக ஓசூர், ஆலூர் மற்றும் குருபரப்பள்ளி துணை மின் நிலையங்களில் ரூ.9.75 கோடி மதிப்பில் திறன் உயர்த்தும் பணிகளை தொடங்கி வைத்தார். இதையொட்டி கிருஷ்ணகிரி தாலுகா குருபரபள்ளி துணை மின்நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி, திறன் உயர்த்தும் இயக்கத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் ஏஞ்சலா சகாயமேரி முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-

ரூ.9.75 கோடி மதிப்பு

ஆலூர், ஓசூர், குருபரப்பள்ளி ஆகிய துணை மின் நிலையங்களில் ரூ.9 கோடியே 75 லட்சத்தில் திறன் உயர்த்தபட்டுள்ளது. இதன் மூலம் விவசாய மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு மின்சாரம் சரியான முறையில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் ரூ.803 கோடி செலவில் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் ஓராண்டில் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பு திட்டமான ஒரு லட்சம் மின்சார இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8,386 பயனாளிகளுக்கு இலவச மின் வசதி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் செயற்பொறியாளர்கள் முத்துசாமி, வேலு, கவிதா, ஒன்றியக்குழு தலைவர் சரோஜினி பரசுராமன், ஒன்றியக்குழு உறுப்பினர் சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் செந்தாமரை செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story